தமிழக அரசு தேர்வு வாரியம் என்று சொல்லக்கூடிய டிஎன்பிஎஸ்சி இது மிகவும் ஒரு பெரிய ஒரு தேர்வு வாரியம் என்றே சொல்லலாம். இந்த டிஎன்பிஎஸ்சி வாரியம் மூலம் குரூப் 1 குரூப் 2 குரூப் 3 மற்றும் குரூப் 4 விஏஓ போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைவரும் மிகவும் அதிகமாக விரும்பக்கூடிய தேர்வு என்றால் அது டிஎன்பிஎஸ்சி என்று கூறலாம். இந்த டிஎன்பிஎஸ்சி தேர்விற்காக தமிழ்நாட்டில் எக்கச்சக்கமான மாணவர்கள் பல்வேறு அகாடமிகளில் தங்கி தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். சராசரியாக ஒரு வருடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேலானோர் டிஎன்பிஎஸ்சி பொது தேர்வை எழுதுகிறார்கள் என்று டி என் பி எஸ் சி வாரியம் கூறியுள்ளது.
TNPSC தலைவர் 2023
டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தின் தற்போதைய தலைவராக கா. பாலச்சந்திரன் பணியாற்றி வருகிறார். மேலும் அவருக்கு தற்போது வேறு துறை ஒதுக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மேலும் அந்த பணிக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த சைலேந்திரபாபு அவர்கள் விரைவில் TNPSC புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என்று டிஎன்பிஎஸ்சி வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
TNPSC தலைவரை மாற்ற காரணம் என்ன?
திடீரென்று TNPSC தலைவரை மாற்றுவதற்கு காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை ஏற்கனவே பணியாற்றி வந்த கா. பாலச்சந்திரன் அவர்கள் வேறு ஒரு பதவிக்கு செல்ல இருப்பதால் இந்த பதவி திரு.சைலேந்திரபாபு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சைலேந்திரபாபு அவர்கள் தமிழ்நாட்டின் டிஜிபியாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது அவர் ஓய்வு பெறும் வயதை எட்டியுள்ளார் எனவே அவருக்கு தமிழ்நாடு அரசு இந்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியை ஒதுக்கியுள்ளது.
இவர் மிகவும் நேர்மையாகவும் மற்றும் கண்ணியமாகவும் டிஜிபி பதவியில் வகித்ததால் அதே நேர்மை மற்றும் கண்ணியத்துடன் டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்து எந்த ஒரு முறைக்கேடும் இல்லாமல் அனைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளையும் மிகவும் நேர்மையாக நடத்துவார் என்ற நம்பிக்கையில் அரசு அவருக்கு இந்த பதவியை ஒதுக்கி உள்ளது.