கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது திமுக தேர்தல் அறிக்கையில் மிகவும் ஒரு சிறப்பான திட்டமாக மக்கள் பார்த்து வந்த நிலையில் தற்போது அந்தத் திட்டத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது மேலும் இந்த திட்டத்தை பற்றிய விபரங்களை கட்டுரையில் தெளிவாக நாங்கள் வழங்கியுள்ளோம்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்பது குடும்பத் தலைவி அல்லது குடும்பத்தில் 21 வயது அல்லது அதற்கு மேல் இருக்கக்கூடிய பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் அவர்களது வங்கிக் கணக்கில் வழங்கும் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஒன்றரை கோடிக்கும் மேலான பெண்கள் பயனடைவார்கள் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை வழங்கியுள்ளது இதில் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கக்கூடிய அனைத்து குடும்ப பெண்களும் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- மொபைல் நம்பர்
- ஆதார் கார்டு
- குடும்ப அட்டை
- புகைப்படம்
- சொத்து விபர பட்டியல்
- வருமான சான்றிதழ்
யார் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள்?
மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு தகுதியான விபரங்களை கீழே பட்டியலிட்டு கொடுத்துள்ளோம்.
- குறைந்தபட்சம் 21 வயது முடிந்திருக்க வேண்டும்
- ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
- உரிமைக் கோட்டுக்கு கீழ் இருக்கக்கூடிய பெண்கள் விண்ணப்பிக்கலாம்
- கணவனை இழந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்
- 5 ஏக்கருக்கு குறைவான நஞ்சை நிலம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
- அல்லது 10 ஏக்கருக்கு குறைவான புஞ்சை நிலம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
- வருடத்திற்கு 3600 யூனிட்டுக்கு குறைவான மின்சாரம் பயன்படுத்துபவர்கள் விண்ணப்பிக்கலாம்
யார் கலைஞர் மகளிர் உதவி தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது?
- 2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் குடும்பம் விண்ணப்பிக்க முடியாது
- வருமான வரி செலுத்துவோர் விண்ணப்பிக்க முடியாது
- தொழில் வரி செலுத்துவோர் விண்ணப்பிக்க முடியாது
- அரசு மற்றும் பொதுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் விண்ணப்பிக்க முடியாது
- ஓய்வூதியம் பெறுவோர் விண்ணப்பிக்க முடியாது
- சொந்தமாக நான்கு சக்கரம் அல்லது அதற்கு மேல் கனரக வாகனம் வைத்திருப்போர் விண்ணப்பிக்க முடியாது
- விதவை ஓய்வூதியம் மற்றும் தொழிலாளர் நலத்துறையில் இருந்து ஓய்வூதியம் பெறுவோர் விண்ணப்பிக்க முடியாது
குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் யாரேனும் அரசிடம் இருந்து உதவித்தொகை பெற்று வந்திருந்தாலூம் அவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?
இந்தத் திட்டத்திற்கு வீட்டில் இருந்தபடியே மொபைல் மூலம் மிகவும் எளிமையான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு ஆனது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதாவது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற ஒரு மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் நம்முடைய சுயவிபரம் மற்றும் சொத்து பட்டியல் விவரங்கள் போன்றவற்றை கொடுத்து இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
எப்போதிலிருந்து மகளிர் உதவி தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்?
வருகின்ற செப்டம்பர் 15, 2023 ஆம் தேதி முதல் இந்த திட்டத்திற்கு வீட்டில் இருந்தபடியே மிகவும் எளிமையாக கலைஞர் மகளிர் உதவித்தொகை செயலி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மகளிர் உதவித்தொகை திட்டத்தைப் பற்றிய பொதுவான விபரம்
இந்த திட்டமானது அனைத்து ஏழை எளிய மற்றும் பொருளாதார அடிப்படையில் பின்தங்கி இருக்கக்கூடிய குடும்ப பெண்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இதற்கு 21 வயது நிரம்பிய பெண்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் மேலும் ஒரே வீட்டில் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேலான 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இதில் யாரேனும் ஒருவர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. உதாரணமாக குடும்ப அட்டையில் குடும்ப தலைவியாக இருப்போர் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் அல்லது குடும்ப அட்டையில் குடும்ப தலைவராக இருப்பவரின் மனைவி இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்று அரசு கூறுகிறது.