வாக்கு சாவடியில் எத்தனை பேர் வரிசையில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம் | தேர்தல் ஆணையத்தின் புதிய வசதி

Tamilnadu Election Polling Station Queue Status Online 2024: தமிழக முழுவதும் 2024க்கு காண பாராளுமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கயிருக்கிறது. இதற்காக பல்வேறு கட்சியினர் தங்களுக்கான தேர்தல் பணியை மிகவும் தீவிரமாக செய்து கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தேர்தல் ஆணையம் ஆனது வாக்காளர்களுக்கு வருடம் தோறும் புத்தம் புதிய ஒரு வசதியை அறிமுகப்படுத்துவதில் வழக்கம். அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு அருமையான வசதியை வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த புதிய வசதிகள் பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

Tamilnadu Election Polling Station Queue Status Online 2024

தேர்தல் ஆணையத்தின் புதிய வசதி 2024

இந்திய தேர்தல் ஆணையம் ஆனது வாக்காளர்களின் நலனை கருத்தில் கொண்டு வாக்குச்சாவடியில் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பந்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்வது எல்லா தேர்தல்களிலும் வழக்கமான ஒன்று.

தற்போது ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் எத்தனை நபர்கள் வரிசையில் தற்போது நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான இணையதளத்தை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. www.erolls.tn.gov.in என்ற இணைப்பை கிளிக் செய்து நமது பகுதியில் வாக்குச்சாவடியின் விபரங்களை தேர்வு செய்து தற்போது எத்தனை நபர்கள் வாக்கு அளிப்பதற்கு வரிசையில் நிற்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

வாக்குச்சாவடியில் எத்தனை நபர்கள் வரிசையில் இருக்கிறார்கள் என்பதை எப்படி பார்ப்பது?

  1. முதலில் www.erolls.tn.gov.in என்ற இணையதளத்தை கிளிக் செய்து கொள்ளவும்
  2. மாவட்டத்தை தேர்வு செய்து கொள்ளவும்
  3. அடுத்து உங்களுடைய சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்து கொள்ளவும்
  4. பிறகு வாக்கு சாவடியின் பெயரை தேர்வு செய்து கொள்ளவும்
  5. இறுதியாக Submit என்ற பட்டனை கிளிக் செய்யவும்

தற்போது தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் எத்தனை நபர்கள் வாக்களிப்பதற்கு வரிசையில் இருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வசதியானது மிகவும் அற்புதமான வசதியின்றி நாம் கருதலாம். பொதுவாக வாக்களிக்க நாம் சென்றால் அங்கு மிகப்பெரிய வரிசை ஒன்றை நாம் பார்க்க முடியும். அவ்வாறு அந்த வரிசையை பார்க்கும் பொழுது நாம் தற்போது வாக்களிக்கலாமா அல்லது வீட்டிற்கு சென்று விட்டு பிறகு வரலாமா என்று நமக்கு குழப்பம் ஏற்படும். ஆனால் தற்பொழுது தேர்தல் ஆணையம் நமக்கு வழங்கியுள்ள இந்த அற்புதமான வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே நமது பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் தற்போது எத்தனை நபர்கள் வாக்களிக்க நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக பார்க்க முடியும். எனவே வாக்காளர்கள் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்தி கூட்டம் இல்லாத நேரம் பார்த்து வாக்குளியுங்கள்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *