கேரளாவில் தற்போது புதிதாக வைரஸ் ஒன்று மக்களிடையே பரவி வருகிறது என்பது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு தற்போது தான் நாடு இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கும் நிலையில் கேரளாவில் இந்த புதிய வைரஸ் பரவுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் புதிய வைரஸ்
தமிழகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புருசெல்லோசிஸ் என்ற வைரஸ் மக்களை தாக்க தொடங்கியுள்ளது. தற்போது கேரள மாநிலத்தில் இருக்கும் தந்தை மற்றும் மகனை இந்த வைரஸ் தாக்கியுள்ளது அவர்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
புருசெல்லோசிஸ் வைரஸ் எப்படி பரவும்
புருசெல்லோசிஸ் பொருத்தவரை விலங்குகளிடமிருந்து நேரடியாக மனிதர்களுக்கு பரவும் ஒரு கொடிய வைரஸ் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக ஆடு, மாடு, பன்றி, நாய் போன்ற விலங்குகளிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களை மிகவும் எளிதான முறையில் தாக்கக்கூடியது என்று மருத்துவ வட்டார ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புருசெல்லோசிஸ் அறிகுறி
புருசெல்லோசிஸ் தாக்கப்படும் ஒருவருக்கு உடல் சோர்வு, தலைவலி, காய்ச்சல், உடல் பலவீனம் போன்றவை ஆரம்ப அறிகுறிகளாக இருக்கும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
புருசெல்லோசிஸ் வைரசால் ஏற்படும் பாதிப்பு
புருசெல்லோசிஸ் வைரசால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருக்கு அவருக்கு ஆரம்ப அறிகுறி உடல் சோர்வு தலைவலி, காய்ச்சல் உடல் பலவீனம் போன்றவை தோன்றும் என்பது நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். மேலும் இந்த வைரஸ் தீவிரமடையும் நிலையில் பாதிக்கப்பட்டவரின் நரம்பு மண்டலம், இதயம் பெரும் அளவில் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
கேரளா அரசாங்கம் ஆனது இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மக்களிடையே பெரும் அளவில் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை வழங்கியுள்ளது. குறிப்பாக இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவக்கூடிய ஒரு பாக்டீரியா வைரஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாம் வீட்டு விலங்குகளை மிகவும் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் வளர்ப்பது இந்த வைரஸிலிருந்து நாம் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு நல்ல தீர்வாகும்.