தமிழ்நாடு அரசின் அடுத்து வரக்கூடிய இரண்டு ஆண்டுகளில் ஏறத்தாழ பல்வேறு துறைகளில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளதாக 16 பிப்ரவரி 2024 ஆம் தேதி அன்று மக்களிடையே நேரடியாக தமிழக முதலமைச்சர் மாண்புமிகு MK ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். அதில் அவர் கூறியதாவது மக்களுக்கு பயன்படக்கூடிய பல்வேறு வகையான திட்டங்களை திமுக அரசு மிகவும் விரைவாக செயல்படுத்திக் கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, மகளிர் காண இலவச பேருந்து பயணம் போன்ற பல்வேறு திட்டங்களை அவர் குறிப்பாக கூறினார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் வரும் இரண்டு ஆண்டுகளில் நிரப்பப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
MK ஸ்டாலின் கூறிய அரசு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 38 மாவட்டங்களிலும் பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் காலியாக இருப்பதாக முதல்வர் தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இதுவரை ஏறத்தாழ 60 ஆயிரத்து 237 நபர்களுக்கு திமுக அரசில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். தமிழ்நாட்டில் பல்வேறு புதிய நிறுவனங்கள் மற்றும் அரசு புதிய திட்டங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட உள்ளதால் வேலைவாய்ப்பு இளைஞர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் என்று கூறினார்.
எந்தெந்த துறையில் காலிப்பணியிடங்கள் இருக்கும்
பொதுவாக TNPSC, TNEB, TNUSRB மற்றும் உயர் நீதிமன்றம் போன்ற பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் ஆனது ஆண்டுதோறும் வந்த வண்ணமாகவே உள்ளது. அதுபோல சத்துணவு துறை, போக்குவரத்து துறை ஊனமுற்றோர் நலன் துறை இதுபோன்று பல்வேறு வகையான துறைகளில் காலி பணியிடங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் நிரப்பப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்து இருந்தார்.
ஐம்பதாயிரம் காலிப்பணியிடங்கள் என்பது நாம் எதிர்பார்க்காத மிகப்பெரிய காலிப்பணியிடம் என்பதால் இதில் கண்டிப்பாக எட்டாம் வகுப்பு படித்தவர்கள் 10ஆம் வகுப்பு படித்தவர்கள், 12ஆம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்தவர்கள் அனைவருக்கும் இது ஒரு அருமையான வாய்ப்பாக நாம் கருதலாம்.